Sunday, April 19

கருடன்-பட விமர்சனம்

சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தினை ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்) என்னும் .அமைச்சர் கோயிலுக்கு உரிய நிலத்தை கைப்பற்ற நினைக்கிறார், ஆனால் அதற்க்குரிய பட்டாவினை பாதுகாப்பாக பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம்,.அந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஆதியும் (சசிகுமார்), கர்ணாவும் (உன்னி முகுந்தன்).இளம்வயது முதலாக உற்ற நண்பர்கள் .கர்ணா குடும்பத்துக்கு உண்மையாகவும் உற்ற துணைவனான சேவகனாகவும் சொக்கன் உள்ளார் (சூரி). இதன் பின் நிலத்தின் பட்டாவை கைப்பற்ற வேண்டி, ஆதி – கர்ணா நட்பில் உரசலை ஏற்படுத்த நடைபெற்ற முயற்சிகள் என்ன?அதனால் ஆதி – கர்ணா நட்பு என்ன ஆனது ? இந்த சூழ்நிலையில் சொக்கனின் நிலைப்பாடு என்ன ? என்பது படத்தின் மீதி கதை ஆகும்.சொக்கனாக நடித்துள்ள சூரிக்கு மேலும் ஒரு பேர் சொல்லும் படம்.வலுவான கதாபாத்திரத்துக்கு ஏற்ற சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படித்துள்ளார் சசிகுமாருக்கு ஏற்றதொரு கதாபாத்திரம் இதுபோன்ற கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருந்தி போகக்கூடிய அவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். கர்ணா என்னும் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தனும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார், மேலும் சமுத்திரக்கனி,ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி , ஷிவதா, ரேவதி ஷர்மா,என் அனைவரும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்துள்ளார்கள் .

நடிகர்களின் யதார்த்தமான நடிப்புக்கு, மேலும் பலம் சேர்க்கும் வகையில் யுவனின் பின்னணி இசை ,ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு, பிரதீப் ராகவின் படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பாளர்களின் பங்களிப்பும் இயக்குனரின் கதை நகர்வுக்கு உறுதுணையாக உள்ளது. துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இந்த கருடன் திரைவானின் உச்சியில் தன் சிறகினை விரித்து பறப்பான்.

Spread the love