வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், வெளிவந்துள்ள திரைப்படம் ‘P T சார்’ .
தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருவபவர் கனகவேல் (ஆதி) .எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அவரை கண்ணும்கருத்துமாய் வைத்துஇருக்கிறார் அவரது அம்மா(தேவதர்ஷினி), தான் பணிபுரியும் அதே பள்ளியில் உடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை வானதியிடம்(காஷ்மீரா பர்தேஷி) கனகவேல் காதல் வசப்பட, திருமண ஏற்பாடுகளும் துவங்குகிறது..ஆனால் அந்த சூழ்நிலையில் இளம்பெண் நந்தினிக்கு (அனிகா சுரேந்திரன்) ஏற்படும் பிரச்சனைக்கு கனகவேல் உதவ , அதனால் அவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது ,அவை என்ன? அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயனாய் கனகவேல் என்னும் கதாபாத்திரத்தில் உடற்கல்வி ஆசிரியராக ஹிப்ஹாப் ஆதி, நடித்துள்ளர். வழக்கமான தன்னுடைய பாணியில் நன்கு நடித்துள்ளார். வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள காஷ்மீரா பர்தேஷி ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு குறைவில்லாமல் நடித்துள்ளார்
சிறு இடைவெளிக்குப்பின் குருபுருஷோத்தமன் என்னும் பெயரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் தியாகராஜன் நன்கு நடித்துள்ளார், சிறப்பு கதாபாரத்திரங்களில் பிரபுவும்,பாக்கியராஜும் தங்களது அனுபவ நடிப்பை நயம்பட வெளிப்படுத்தியுள்ளார்கள். மேலும் நாயகனின் அம்மாவாக வரும் தேவதர்ஷினி, அனிகாசுரேந்திரன். இளவரசு பாண்டியராஜன், முனீஷ்காந்த் ஆகியோரும் தத்தம் கதாபாரத்திங்களில் நன்கு நடித்துள்ளார்கள் .
காட்சிகளை அழகாய் பதிவு செய்துள்ள மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசையும் நன்றாக உள்ளது ,பாடல்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.ஆதிக்கு இசையமைப்பாளராக இது 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகால, சமூக பிரச்னைகளை மையமாக கொண்ட கதைக்கு திரைக்கதை காட்சிகளின் வழியே திரைவடிவம் கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால்.
பொழுபோக்குக்கு படம் பார்க்கவரும் ரசிகர்களை இந்த ‘P T சார்’ ஏமாற்றமாட்டார்.
