ரசவாதி விமர்சனம் .
கொடைக்கானலில் உள்ள சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்).என்னும் மருத்துவருக்கும் , அந்த ஊருக்கு வேலைக்கு வரும் சூர்யாவிற்கும் (தான்யா ரவிச்சந்திரன்) காதல் மலர்கிறது ,அந்த ஊருக்கு பரசுராஜ் (சுஜித் சங்கர்) என்னும் காவல் அதிகாரி புதிதாக வருகின்றார். சதாசிவ பாண்டியன்- சூர்யா இருவரது காதலையும் பிரிப்பதற்காக பரசுராஜின் பல்வேறு சதி சிக்கல்களை நாயகனும் நாயகியும் நேர்கொள்ளுகிறார்கள், அந்த சூழ்ச்சி சிக்கல்களிருந்து , சதாசிவ பாண்டியனும் சூர்யாவும் எப்படி மீண்டார்கள் ? – பரசுராஜூக்கு சதாசிவ பாண்டியன் மீது வெறுப்பு ஏற்படுவதற்கான பின்புலம் என்ன ? இது போன்ற வினாக்களுக்கு விடையினை தருவதுவே ‘ரசவாதி’யின் மீதிக்கதை.
கதையின் நாயகனாய் அர்ஜுன் தாஸ், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக நிறைவாக நடித்துள்ளார். நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன், டாக்டர் சைலஜாவாக நடித்துள்ள விஜே ரம்யா, ஜி.எம்.சுந்தர் , சந்திரவாக நடித்துள்ள ரேஷ்மா வெங்கடேஷ்.போன்றோரும் தத்தம் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்கள் மேலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பை வில்லனாக நடித்துள்ள சுஜித் சங்கர் வெளிபடித்தியுள்ளார்.
‘மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்கள் மூலம் ரசிகர்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆகியிருந்த இயக்குனர் சாந்தகுமார் இந்த ‘ரசவாதி’ படத்தையும் இயக்கியுள்ளார். அது இந்த படத்துக்கும் நிறைய எதிர்பார்ப்பினை ரசிகர்களிடையே ஏற்படித்தியிருக்கிறது

காட்சிகளுக்கு ஏற்ற பின்புலத்தை கொடுத்துள்ள எஸ்.தமனின் இசையும், இயற்கையோடு இணைந்து காட்சிகளை பதிவுட்டுள்ள சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவும் ,சாபுஜோஸப்பின் படத்தொகுப்பும் கதையோட்டத்துடன் பயணித்துள்ளது.
விடுமுறைகாலத்துக்கு ஏற்றதொரு பொழுதுபோக்கு படம்.
