Friday, April 24

குரங்கு பெடல்- விமர்சனம்

பொதுவாக கோடைவிடுமுறையில் புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ள சிறுவர்களின் மனநிலையினை பிரதிபலிக்கும் இந்த கதையில்  கிரா மம் ஒன்றில் உள்ள 5 சிறுவர்கள் கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.இந்த கதை நடைபெறுவதாக காட்டப்படும் கால சூழலில் தங்களுக்கென சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கும் குடும்பங்கள் மிகவும் அரிது ,அப்படிப்பட்ட சமயத்தில் 5 சிறுவர்களில் ஒருவன் சைக்கிள் வாங்கி விடுகிறான், மற்ற மூன்று சிறுவர்களும் சைக்கிள் வாங்கியவனிடம் சேர்ந்து விட, மாரியப்பன் என்னும் சிறுவன் மட்டும் வாடகைக்கு சைக்கிளை எடுத்து ஓட்டிப் பழகுகிறான், அதன் பிறகு அந்த சிறுவர்களின் வாழ்வியல் சூழலில் நடக்கும் சம்பவங்களை மீதி கதை அழகுற பதிவு செய்துள்ளது.ராசி அழகப்பன் அவர்கள் கைவண்ணத்தில் உருவான சைக்கிள் சிறுகதையை மையமாக வைத்து படமாக்கப்பட்டிருக்கும் இந்த குரங்கு பெடல் படம் ,கைபேசி இல்லாத காலக்கட்டத்தில் சிறுவர்களின் வாழ்க்கை சூழல் எப்படி அழகுற அமைக்கப்பட்டுருந்தது என்பதை பதிவு செய்துள்ளது . இந்தப் படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்,நவீன காலத்தில் மறைந்து போன பல அழகிய நினைவுகளைத் தூண்டி விடும் வண்ணம் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடராஜா சர்வீஸ் கந்தசாமி என்னும் கதாபாத்திரத்தில் காளி வெங்கட்,மாரியப்பன்,  சந்தோஷ்வேல்முருகன் , ராகவன், ரதிஷ் ,சாய்கணேஷ் ,ஞானசேகர், பிரசன்னா ,தக்ஷணா என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்துள்ளார்கள். சுமி. பாஸ்கரனின் ஒளிப்பதிவும் ,ஜிப்ரானின் இசையும் படத்தின் கதாபாத்திரங்க்ளின் வாழ்வியல் சூழலோடு நாமும் பயணிக்கும் வகையில் நன்கு அமைந்துள்ளது .
கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம் .

Spread the love