Saturday, April 25

தேசிய விருது பெற்ற பழம் பெரும் இயக்குநர் துரை காலமானார்

தமிழ் சினிமாவின் தலை சிறந்த படைப்புகளின் ஒன்றாகிய பசி படத்தையும் சிவாஜி ,கமல்,ரஜினி  போன்ற பிரபல தமிழ் திரை கலைஞர்களின் படங்களை இயக்கியவரும் ஆகிய இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக தனது 84 வது வயதில் காலமானார்.

.இயக்குனர் துரை அவ்ர்கள், 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர். அவர் 1974-ஆம் ஆண்டு முத்து ராமன் ,சுமித்ரா,நடித்த ‘அவளும் பெண்தானே’ என்கிற படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமானவர்.அதன் பின் இவர் இயக்கிய சில படங்கள்.

ஒரு குடும்பத்தின் கதை (1975) ஆசை 60 நாள் (1976) சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரகுபதி ராகவன் ராஜாராம் (1977)) சதுரங்கம் (1978)ஆயிரம் ஜென்மங்கள்,பாவத்தின் சம்பளம் (1978) ,ஒரு வீடு ஒரு உலகம் (1978) மற்றும் பசி (1979) 1979 – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதினை – பசி திரைப்படம் பெற்றது மேலும் இந்தப் படத்தில் நடித்த ஷோபாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது ,.இந்த ‘பசி’ படத்தை இந்தியிலும் பெட் பியார் அவுர் பாப் (1984) என்ற பெயரில் துரை இயக்கினார் ,இதில் ராஜபாபர், சுமிதாபாட்டில் நடித்து இருந்தார்கள்.

மேலும் கடமை நெஞ்சம் (1979) ஒளி பிறந்தது (1979)உலகநாயகன் கமலஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த நீயா (1979) மரியா மை டார்லிங் (1980)பொற்காலம் (1980) ,அவள் ஒரு காவியம் (1981) மயில் (1981),தனி மரம் (1981) மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த கிளிஞ்சல்கள் (1981) இந்த படத்தின் இசை பாடல்கள் T. ராஜேந்தர் ,எங்க வாத்தியார் (1980), நடிகர்திலகம் சிவாஜி கணேசன் , சுரேஷ், சரிதா ராதா நடித்த துணை , மலையாளத்தில் பூர்ணிமா ஜெயராம் நடித்த(1982)வெளிச்சம் விதருன்னா பென்குட்டி (1982)டூ குலாப் (1983)பெட் பியார் அவுர் பாப் (1984) வேலி (1985) ஒரு மனிதன் ஒரு மனைவி (1986) பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988) போன்றவை ஆகும்


இயக்குநர் துரை, தமிழில் படங்களையும் தயாரித்துள்ளார்.அதில் இவர் தயாரித்த வீரபாண்டியன்(1987)படத்தில் நடிகர்திலகம் சிவாஜி,கேப்டன் விஜயகாந்த் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இயக்குனர் துரை அவர்கள் பெற்ற விருதுகள்

1978 – சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது – ஒரு வீடு ஒரு உலகம்
1979 – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது – பசி திரைப்படம்.
1979 – சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது – தமிழ்- பசி.
1982 – கலைமாமணி விருது

அகவை 84லில் வயது மூப்பின் காரணமாய் மறைந்த இயக்குனர் துரையின் பெயர் என்றென்றும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் .

Spread the love