Wednesday, December 31

‘ரோமியோ’ -விமர்சனம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக்- காமெடி திரைப்படம் ‘ரோமியோ’

மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு தாய்நாட்டுக்கு திரும்பும் அறிவு (விஜய் ஆண்டனி)க்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவருடைய பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது நெல்லையிலிருந்து திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்புக்காக சென்னை வந்து முயற்சிக்கும் (லீலா மிருணாளினி ரவி)வும் ஒரு துக்க நிகழ்வுக்காக வருமிடத்தில் சந்திக்கிறார்கள். சினிமா கனவுகளுடன் இருக்கும் லீலாவை ( மிருணாளினி ரவி)அறிவு (விஜய் ஆண்டனி) திருமணம் செய்துகொள்கிறார், திருமணத்தில் விருப்பமில்லாது இருக்கும் மிருணாளினியின் மனதை கவர விஜய் ஆன்டனி. என்ன செய்கிறார் ? அதன்பின் தம்பதியினர் இல்வாழ்க்கையில் இணைந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே படத்தின் ரோமியோ படத்தின் மீதி கதை.ஆகும்.
இதற்க்கு முன் பல படங்களில் இறுக்கமான கதாபாத்திரங்களில் மட்டுமே நாம் பார்த்து பழகியிருந்த விஜய் ஆண்டனியை இந்த படத்தில் பிரெஷாக வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்கும்போது அட… விஜய் ஆண்டனி புதுசாக இருக்காரேன்னு நமக்கு தோன்றும் வகையில் அவரது நடிப்பும்,, தோற்றமும் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கதாபாத்திரங்களை அவர் ஏற்று சில படங்களில்  தொடர்ந்து நடிக்கலாம்.

கதையின் நாயகியாக லீலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிருணாளினி கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் வண்ணம் இயல்பாக நடித்துள்ளார்,மேலும் யோகி பாபு , விடிவி கணேஷ் இருவரின் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

.எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷனல் கலந்த கதையில், விறுவிறுப்பான காட்சிகளை கொண்டு விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.அவருக்கு பக்க பலமாய் பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவும், பரத் தனசேகரின் இசையும் அமைந்துள்ளன.

இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த ரோமியோ அனைவரையும் கவர்வான்.

Spread the love