கள்வன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார்.கதையின் நாயகனாக ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இவானா,KPY தீனா மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY தீனா) சத்தியமங்கலம் பகுதியினை சார்ந்த ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியில் சின்னச்சின்ன திருட்டுகளைச் செய்துவருபவர்கள் ஒருசமயத்தில் , திருடுவதற்காக சென்ற இடத்தில் பாலா மணியை (இவானா) சந்திக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு நாயகி மீது காதல் மலர்கிறது , அவருக்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் தாத்தாவை (பாரதிராஜா)கெம்பா தத்தெடுக்கிறார், காதலுக்காகவே தாத்தாவை கெம்பா தத்தெடுத்தார் என்ற நிலையில், கெம்பனின் திட்டமோ மற்றொன்றாக உள்ளது.கடைசியில் கெம்பனின் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை மேதை கதை சொல்லுகிறது.

கதையின் நாயகனாக கெம்பராஜு என்னும் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், இயல்பான கிராமத்து இளைஞனாக நன்கு நடித்துள்ளார். பலப்படங்களில் தன்னுடைய இயக்கத்தின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இந்த படத்தின் மூலம் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார். கதையின் நாயகனின் காதலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள இவானா கிடைத்த கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்துள்ளார், மேலும் தீனாவின் காமெடிகளும் ரசிக்கும்படி உள்ளன.
மலை பகுதி கிராமீய சூழலை இயக்குநர் பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவு செய்துள்ளது ஜி.வி.பிரகாஷின் இசையில்,பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன, ரேவாவின் பின்னணி இசை, காட்சிகளின் பின்புலத்துக்கு வலு சேர்த்துள்ளது.
இயற்கை எழில் நிறைந்த வன வாழ்வியல் சூழல் கொண்ட பகுதியில் நடைபெறும் கதையில், இயல்பான கதாபாத்திரங்கள், காட்டு யானைகள், என நிறைந்த காட்சிகளில் , காதல், நகைச்சுவை ,எமோஷன் என் அனைத்தும் கலந்த ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக , இயக்குனர் பி.வி.சங்கர் இந்த கள்வனை உருவாக்கியுள்ளார்.
கள்வன் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களை கவர்வான்.
