கதையின் நாயகன் யோகிபாபு அயல்நாட்டுப்பெண்ணை திருமணம் புரிந்துகொள்ளுகிறார்,அவரால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் குழு (சேஷு ,தங்கதுரை,பாலா,நாட்டாமை ரோபோசங்கர்) யோகிபாபு மீண்டும் ஊருக்கு வந்தால் அவரை பழிவாங்கவேண்டும் என்று காத்து கிடக்கிறார்கள் அயல்நாட்டு மனைவியை விவாகரத்து செய்ய விரும்பும் யோகிபாபுவிடம் அவரது மனைவி ஊரிலுள்ள அரண்மனையில் ஓர்நாள் த ங்கவைத்தால் விவாகரத்து தருவதாக சொல்ல அதன்படி யோகிபாபு தனது மனைவியுடன் ஊருக்கு வந்து அரண்மனையில் தங்குகிறார் அந்த அரண்மனையில் யோகிபாபு தந்தை கண்பிடுத்த அபூர்வ பொருள் ஒன்றும் உள்ளது,அந்த பொருளை அந்த அயல்நாட்டுப்பெண் கைப்பற்றினாரா? யோகிபாபுவை பழிவாங்க காத்திருந்த நண்பர்கள் குழுவின் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே மீதி கதையாகும் .
கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ளார்,அவரிக்கேற்ற பாணியில் இந்தப்படத்திலும் நகைச்சுவையில் ரசிக்கும்படி நடித்துள்ளார்,சேஷு ,தங்கதுரை,பாலா,ரோபோசங்கர் வழக்கம் போல அவர்களது ஸ்டைலில் காமெடி வெடிகளை வீசி உள்ளார்கள் .ஓவியாவின் பங்களிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது .
சந்தன் மற்றும் தர்ம ப்ரகாஷ் இசையில் பின்னணி இசை நன்றாக உள்ளது, பாடல்களில் இன்னமு,ம் கவனம் செலுத்தி இருக்கலாம் ,கதைக்கேற்ற கோணங்களை, காட்சிகளின் தன்மைக்கு தகுந்தவாறு பதிவு செய்துள்ள சுபாஷ் தண்டபாணி ன் ஒளிப்பதிவு, இயக்குனருக்கு உறுதுணையாக அமையப்பெற்றுள்ளது .
பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைக்கு, பொருத்தமான நகைச்சுவை நடிகர்கள் பட்டாளங்களுடன் இணைந்து ,கலகலப்பான படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்வதேஷ் MS .
விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க நல்லதொரு COMDY TIMEPASS படம் இது .
