சேலத்தில் பொறியியல் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த நாயகன் சச்சினுக்கு (நஸ்லன் )லண்டன் செல்ல வேண்டும் என்பது ஆசை ஆனால், அவருக்கு அங்கு செல்ல விசா கிடைக்கவில்லை.அதன்பின் நுழைவுத் தேர்விற்குத் தயாராவதற்காக ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சச்சின் சேர்கிறார்.நாயகி ரீனு (மமிதா பைஜு), ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்கிறார்,.ஒரு சூழலில் சச்சினும் ரீனும் திருமண வீட்டில் சந்திக்கிறார்கள்.சந்தித்த வேளையில் ரீனு மீது சச்சின் காதலில் வீழ்கிறான் ,இவர்கள் காதல் கை கூடியதா ?இல்லையா ?சச்சினின் பயண கனவு என்னவானது ?என்பதை நயம்பட சொல்லுகிறது பிரேமலு படத்தின் மீதி கதை.

கதையின் நாயகன் சச்சினாய் நஸ்லன்,.நாயகி ரீனுவாக மமிதா பைஜூ இருவரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை சித்தரிக்கும் வண்ணமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் மேலும் அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சங்கீத் ப்ரதாப் அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், ஷ்யாம் மோகன் போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை குறைவின்றி நிறைவாக கொடுத்துள்ளார்கள்

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும் , ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பும் இயக்குனரின் எண்ண ஓட்டத்துடன் பயணித்து படத்துக்கு மேலும் பொலிவு சேர்க்கிறது விஷ்ணு விஜய்யின் பாடல்களும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வகையில் பின்னணி இசையும் படத்தின் பெரிய பிளஸ் ஆக உள்ளன
தெளிவான திரைக்கதையுடன் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வடிவத்தினை தரும் நடிகர்களை கொண்டு நிறைவான படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.
