Thursday, April 23

அமிகோ கேரேஜ் – விமர்சனம்

கதையின் நாயகன் (மாஸ்டர் மகேந்திரன்) இளம் வயதிலிருந்தே அதே பகுதியில் உள்ள அமிகோ கேரேஜ் என்ற கார் செட்டில் இருப்பவர்களுடன் பழக வேண்டும் என்று நினைக்கிறார்.அந்த கார் கேரேஜை நடத்திக் கொண்டு இருப்பவர் ஆனந்த்( ஜி எம் சுந்தர்) அந்த கேரேஜ் இருக்கும் பக்கமே தங்கள் வாரிசுகள் போகக் கூடாது என்பது அங்குள்ள பெற்றோரின் தவிப்பு . ஆனாலும் அந்த கேரேஜின் மீது ருத்ராவுக்கும் அவனது நண்பர்களுக்கும் ஈடுபாடு, இந்த சூழ்நிலையில் அதே கேரேஜ்க்குள் செல்ல ருத்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கேரஜின் உரிமையாளரான ஆனந்துடன் நல்ல தொடர்புகிடைக்கிறது அதன் பின் இரு சமயத்தில் ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் உள்ள ரவுடிக்கும் ருத்ராவுக்கும் பாரில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் ருத்ராவுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதற்குப்பின் ருத்ராவின் வாழ்வில் நடந்தவை என்ன ? என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகன் ருத்ராவாக நடித்துள்ள மகேந்திரன் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என பல பரிமாணங்களில் சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் அதிரா ராஜ் மற்றும் தீபா பாலு ஆகியோரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றதொரு நடிப்பை கொடுத்துள்ளார்கள் .முக்கியமான கதாபாத்திரத்தில் கேரேஜ் ஓனராக ஆனந்த் என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஜி.எம்.சுந்தரின் நடிப்பில் தனி தன்மை உள்ளது மேலும் தாசரதியும் குறைவின்றி நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் வாழ்வியிலை சுற்றிய ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தில் உள்ள திருப்பங்கள் நிறைந்த கதையில் அதற்க்கு பொருத்தமான நடிகர்களை கொண்டு முழு நீள கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் அவருக்கு பக்க பலமாக பாலமுரளி பாலுவின் இசையும் , விஜய குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும் செய்ய, ரூபனின் படத்தொகுப்பும் நிறைவாக அமைந்துள்ளது

Spread the love