கதையின் நாயகனான விஷ்வக்சென் அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்கள் யாராவது அவரை தொட்டாலே அவருக்கு தீங்கு ஏற்படும் பிரச்சனை அவரிடம் உள்ளது இதனை நிவர்த்தி செய்ய இமயமலைபகுதியில் 36 வருடங்களுக்கு ஒரு முறையே முளைத்து வளரும் தன்மை கொண்ட தாவரம் வேண்டும் , அதனை அங்கு சென்று எடுப்பதற்காக செல்கிறார் ,மற்றொரு துணை கதையில் தேவதாசியான துர்காவின் (அபிநயா) மகளைத் தேவதாசியாகப் பணிபுரிய . நிர்பந்தம் செய்வதிலிருந்து அந்தச் சிறுமி தப்பி செல்கிறாள்,.பிறிதொரு கதையில் நாட்டு எல்லையில் உள்ள முகாமில் மருத்துவ ஆராய்ச்சிக்காக அடைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு இளம் சிறுவனின் நிலையை கூறுகிறது இந்த மூன்று கதைகளும் ஒன்று சேரும் மைய புள்ளியும் , அந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பதிவு செய்துள்ளதே இந்த படத்தின் திரைக்கதை .இறுதியில் விஷ்வக்சென் அந்த சிறப்பான தாவரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டாரா ? மற்றவர்களின் கதைக்கும் இவரது வாழ் க்கைக்கும் எஎந்த வகையில் தொடர்பு உள்ளது என்பதுதான் காமி படத்தின் மீதி கதை.

சங்கர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஸ்வக் சென்னும் ,ஜானவியாக நடித்துள்ள சாந்தினி செளத்ரியும், துர்காவாக நடித்துள்ள அபிநயாவும் தங்களது கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்கள் , மேலும் உமாவாக நடித்துள்ள ஹரிகா பெட்டாவும் இயல்பான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்.
இயற்கை வெளியின் காட்சிகளை அழகாக படம்பிடித்து கதையோடு பயணிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா.,இவரோடு சேர்ந்து இசையமைப்பாளர் நரேஷ் குமரனின் பின்னணி இசையும் . இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்களும் படத்திற்கு மேலும் பலம் தருகின்றன .
அட்வென்சர் த்ரில்லர் திரைப்படமாக இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வித்யாதர் காகிடா
மாறுபட்ட திரைப்படைப்புகளை விரும்பும் ரசிகர்களை நிச்சயம் காமி (Gaami) கவரும் ..
