Thursday, April 23

பைரி- விமர்சனம்

கதையின் நாயகனான ராஜலிங்கம் (சையத் மஜீத்); புறாக்களை வளர்ப்பதிலும், புறா பந்தயத்தில் கலந்து கொள்வதலிலும் ஆர்வமாக உள்ளார் ஆனால் .அவரது அம்மா சரஸ்வதி (விஜி சேகர்) தன் மகன் அதில்  ஆர்வம் காட்டுவதை எதிர்த்து அவனை வேலையில் சேர நிர்பந்திக்கிறார்,ஆனால் அதனை மீறும் லிங்கம் புறாக்களை வளர்ப்பதில் நாட்டமாக உள்ளார் ,இந்த சூழ்நிலையில் அங்கு புறா ரேஸ் போட்டி நடக்கிறது, அதில் சுயம்பு (வினு லாரன்ஸ்). செய்யும் மோசடியை லிங்கம் கண்டுபிடித்து தட்டிக் கேட்பதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது., அதன் பின் என்ன நடக்கிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.

நாகர்கோவில் பகுதி மக்களின் வாழ்வியல் சார்ந்த அம்சங்கள் ,புறா பந்தயம், அதன் மீது ஈடுபாடு ,அதனால் ஏற்படும் விளைவுகள், அது தரும் மாற்றங்கள் என நகரும் கதையின் நாயகனாய் நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பு நன்கு உள்ளது ,மேலும் .அவரது அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகரின் அனுபவ நடிப்பு கதாபாத்திரத்தினை அச்சு அசலாக பதிவு செய்யும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி, வினு லாரன்ஸ், சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் போன்றவர்களின் பங்களிப்பும் அவர்கள் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்தகுமார் வெளிப்புற காட்சிகளின் அழகை சிறப்பாக பதிவு செய்துள்ளார் ,அருண் ராஜின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பக்க பலமாய் உள்ளது .

இயக்குநர் ஜான் கிளாடி,புதிய கதைக்களத்தில் பொருத்தமான நடிகர்களை கொண்டு தெளிவான திரைக்கதையுடன் நிறைவான படத்தை கொடுத்துள்ளார்.

பொதுவாக வாழ்வியலோடு சொல்லப்படும் கதைகள் ரசிகர்களின் தனி கவனத்தை பெறுவதில் தவறுவதில்லை அதற்க்கு இந்த பைரியும் சரியாக பொருந்தும் என்பதில் சந்தேகமேயில்லை .

Spread the love