Monday, May 25

’சிக்லெட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

நயன் கரிஷ்மா, அம்ரிதா, மஞ்சிரா ஆகிய மூன்று பெரும் இளம் சிறு வயது முதலாக நண்பர்களாக உள்ளார்கள் , அவர்களது பெற்றோர்களிடம் பொய் காரணங்களை கூறிவிட்டு விட்டு மூவரும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க முடிவு எடுக்கின்றார்கள், தங்கள் வாரிசுகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உண்மை தெரிந்து அவர்களை தேடிச் செல்கிறார்கள். இறுதியில் என்னதான் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோரது நடிப்பு ,பருவ வயதில் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் இயல்பாக அமையும் வகையில் இருந்தது

அவர்களை காதலிக்கும் மூன்று இளைஞர்களாக சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன் உட்பட மற்றுமொருவரும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு நன்கு நடித்துள்ளார்கள்.

பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் போன்றோரும் இக்கால பெற்றோர்களின் உணர்வுகளை சித்தரிக்கும் வண்ணம் நன்கு நடித்துள்ளார்கள்.

இன்றைய தலைமுறையினரின் வாழ்வியல் சூழலையும், அவர்களது பெற்றோர்கள் சந்திக்கவேண்டிய பிரச்சினைகளையும் மையமாக வைத்து படமாக்கியுள்ளார் இயக்குநர் முத்து.அவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் ,இசையமைப்பாளர் பாலமுரளி பாலு போன்றோரும் துணை நின்றுள்ளார்கள்

வாழ்க்கையின் ஒரு பகுதியில் வந்து போகும் வாலிபவயதில் இளம் தலைமுறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ,அவர்களது பெற்றோர்கள் இளம் தலைமுறையினரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற செய்தியை வணிகரீதியான அம்சங்ககளுடன் பதிவு செய்துள்ளது இந்த சிக்லேட்ஸ் ..

Spread the love