Monday, August 24

“மேரி கிறிஸ்துமஸ்” விமர்சனம்

கதையின் நாயகனான சிவில் இன்ஜினியர் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி) துபாயில் இருந்து மும்பைக்கு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளில் வருகிறார் .அங்கு உணவகம் ஒன்றில் தனது வாய் பேசாத மகள் ஆனியுடன் (பரி ஷர்மா)இருக்கும் மரியாவை (கத்ரீனா கைஃப்) சந்திக்கிறார். இவர்கள் இருவரும் அன்று இரவு டேட்டிங் செய்கின்றனர். கத்ரீனா கைஃப் அவரது வீட்டிற்கு விஜய் சேதுபதியை அழைத்து செல்கிறார் அதன் பின் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?அந்த இரவில் நடக்கும் சம்பவங்கள் என்ன ?என்பதை `மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் மீதி கதை சொல்லுகிறது.

ஆல்பர்ட் என்னும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் உடல் மொழியும், வசனங்களை அவர் வெளிப்படுத்தும் பாங்கும் ரசிக்கும் படி உள்ளது. மரியா என்னும் கதாபாத்திரத்தில் கத்ரீனா கைஃப் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி அப்படியே பிரதிபலிப்பாய் வெளிப்பதும் வகையில் சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா, ராதிகா ஆப்தே, சண்முகராஜன் போன்றோரின் சிறப்பான நடிப்பையும் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் பார்த்து ரசிக்கலாம் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிறைய அளவில் இருந்தது.அந்த எதிர்பார்ப்பில் குறை இல்லாமல் நிறைவான படமாக இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் வழங்கியுள்ளார்.

க்ரைம் த்ரில்லர் வகை கதைகளுக்கு பக்கபலமாய் இருப்பது ஒளிப்பதிவும் பின்னணிஇசையும் என்று சொல்லலாம், அந்த வரிசையில் இந்த படத்தின் ஒளிப்பதிவை மது நீலகண்டனும், பின்னணியிசையினை டானியல்.பி.ஜார்ஜூம் சிறப்புற கொடுத்து படத்தின் கதையோட்டத்துக்கு உறுதுணையாக் நின்றுள்ளார்கள். பிரித்தம் இசையில் ’அன்பே விடை’ என்னும் பாடல் சிறப்பாக அமைந்து ரசிக்கும்படி உள்ளது.

பொங்கல் திரை விருந்தான இந்த மேரி கிறிஸ்துமஸ் படம் அனைத்து ரசிகர்களையும் நிச்சயம் கவரும்.

Spread the love