கதையின் நாயகனாய் கூடவே இயக்குனராகவும் களம் கண்டுள்ள மற்றுமொரு கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பிரியனின் புதிய பரிமாணம் அரணம் .
ஒரு ஊரில் பெரிய மனிதர் தனது பொறுப்பற்ற மகன் மாயவனுடன் வாழ்ந்து வருகிறார் ஜமீன்தார், சொத்து விஷயங்களில் தனது தந்தையுடன் தொடர்ந்து முரண் பட்டு நிற்க்கும் மகன் பலியாகிறார். அந்த வீட்டில் மாயவனின் ஆவி இருப்பதாக ஊர்மக்கள் நினைக்கிறார்கள் பெரியவர் சொத்துக்களை வளர்ப்பு மகன்களுக்கு மாற்றுகிறார். பெரியவரும் இறந்துபோக,வளர்ப்பு மகன் கதிர்வேல் புதிதாக திருமணமான மனைவியுடன் அந்த பங்களாவிற்குச் செல்கிறார் அங்கே அவர்கள் பல அமானுஷ்யங்களை சந்திக்க நேரிடுகிறது அதன் பிறகு என்னவாயிற்று ?என்பதே மீதி கதை.
கதையின் நாயகனாய் கதிர்வேல் என்னும் கதாபாத்திரத்தில் பிரியனின் அறிமுகபடம் இது , தனது உடல் மொழிக்கு ஏற்ற கதைக்கு பாந்தமான கதாபாத்திரத்தில் இயல்பான முறையில் நன்கு நடித்துள்ளார் அவருக்கு பொருத்தமாக , யதார்த்தம் நிறைந்த தில்லைநாயகி என்னும் கதாபாத்திரத்தில் வர்ஷா நன்கு நடித்துள்ளார்.
மேலும் லகுபரன், கீர்த்தனாபோன்றோரும் குறைவின்றி நடித்துள்ளார்கள் கதை களத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவை நித்தின்.கே.ராஜ், இ.ஜே.நௌசத் ஆகியோர் கையாண்டுள்ளார்கள்
கவிஞரை கதையின் நாயகனாய் கொண்டுள்ள படத்தில் பாடல்கள் சிறப்பாக இல்லாவிட்டால் எப்படி? அந்த குறை ஏற்படாத வண்ணம் இசையமைப்பாளர் சாஜன் மாதவின் இசை நிறைவாகவே உள்ளது .
ப்ரியனின் முதல் முயற்சி பாரட்டக்கூடியதே .
