Tuesday, February 3

‘சலார் பகுதி 1’ – விமர்சனம்

‘சலார் பகுதி 1’ – விமர்சனம்

கன்சாரில் உள்ள தேவாவும் (பிரபாஸ்), வரதாவும் (பிருத்விராஜ்) சிறுவயது முதலாக நெருங்கிய நண்பர்கள். ஒரு நிலையில் ’நீ எப்போதும் அழைத்தாலும் திரும்பி வருவேன்’ என்ற வாக்குறுதியுடன் அந்த நகரினை விட்டு தன் தாயுடன் (ஈஸ்வரி ராவ்) தேவா  சென்றுவிடுகிறார் தேவா. நீண்ட இடைவெளிக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வரும் ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) துரத்துபவர்களிடமிருந்து ஆத்யாவை காப்பாற்றி பாதுகாப்பாய் வைக்கிறார் தேவா. தேவாவை எந்த பிரச்சனைக்கும் செல்லவிடாமல் கட்டுப்பாடாய் அவரது தாய் வைத்துள்ளார். ஒரு நிலையில் கன்சார் நகரத்தின் அரசர் ராஜமன்னார் (ஜகபதி பாபு) தனது மகனான வரதாவை அடுத்த அரசனாக அறிவிக்க நினைக்கும் முடிவு ,அங்குள்ள அமைச்சர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சூழ் நிலையில் வரதா தனக்கு உதவ, தனது நண்பன் தேவாவை அழைக்கிறார்.நண்பனின் அழைப்பை ஏற்று அங்கு வரும் தேவா எதிரிகளை வீழ்த்தி, தன் நண்பனை காப்பாற்ற முடிந்ததா ? என்ற வினாவுக்கு விடை சொல்லுகிறது மீதி படத்தின் கதை

கதாநாயகன் பிரபாஸ் ஆர்ப்பாட்டமான ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிப்பை வெளிபடித்தியுள்ளார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் தோற்றமும், உடல்மொழியோடு ஒத்திசைந்து  நன்கு பொருத்தமாக அவருக்கு அமைந்துள்ளது. கொடுத்த பாத்திரத்துக்கு இணங்க ஸ்ருதிஹாசன் தன் பங்குக்கு நிறைவாக நடித்துள்ளார். மற்றும் பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ்,ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி என பல தரப்பட்ட நடிகர்கள் அணிவகுத்து நின்று தங்களது பண்பட்ட நடிப்பை நன்கு வெளிபடித்தியுள்ளார்கள்

பிரஷாந்த் நீலின் படைப்பாக்கத்துக்கு பக்கபலமாய் நின்றுள்ள ஒளிப்பதிவை புவன் கவுடாவும், உஜ்வால் குல்கர்னியின் படத்தொகுப்பும் காட்சிகளில் தேவையான நேர்த்தியையும், வேகத்தையும் சரியான விகிதத்தில் கொடுத்துள்ளது . ரவி பஸ்ருரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தனி கவனம் பெரும் வகையில் உள்ளன.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உள்ள இந்த படம் எல்லா தரப்பினைரையும் கவரும்.

Spread the love