லண்டனில் மனைவியுடன் வசித்துவரும் பிளாஸ்டிக் சர்ஜரி எக்ஸ்பர்ட்டான ராஜ் வர்தன் ( ரிச்சர்டு ரிஷி ) , அழகும், படிப்பும் நிறைந்த தனது மனைவிக்குதெரியாமல் மாயா என்ற மாடலுடன் ( யாஷிகா ஆனந்த்) தொடர்பில் உள்ளார், ஒரு சமயம் மாயாவின் திடீர் மரணத்துக்கு ராஜ் காரணமாகிவிடுகிறார், எவரும் அறியாவண்ணம் மாயாவின் சடலத்தை அகற்றும் ராஜ் , தான் செய்த செயலை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி , தன் நிலையை மனைவி மேதாவிடம் கூறுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ராஜ் வெளிவந்தாரா ?இல்லையா ?என்னும் வினாக்களுக்கு விடை சொல்லுகிறது , படத்தின் மீதி கதை.
ராஜ் வர்தன் என்னும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாய் ரிச்சர்ட் ரிஷி, பல பரிமாணங்க்களில் சிறப்பாக தன் நடிப்பை வெளிபடித்தியுள்ளார் ,யாஷிகா ஆனந்த் மாயா என்னும் கதாபாத்திரத்தில் நன்கு நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார், ரிச்சர்ட்டின் மனைவியாக ‘புன்னகைப் பூ’ கீதாதான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் நிறைவாக நடித்துள்ளார் .
சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு ஏற்ற, விறுவிறுப்பான ட்விட்ஸ்கள் நிறைந்த திரைக்கதையுடன் இப்படத்தை இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தனின் காட்சிப்பதிவுகளும் ரோஹித் குல்கர்னியின் பின்னணிஇசையும் படத்தின் கதை நகர்வுக்கு மேலும் பலம் சேர்க்கிறது.
சஸ்பென்ஸ் திரில்லரான இந்த சிலநொடிகள் இளையதலைமுறையினரை வெகுவாக கவரும்.
