Monday, April 20

செவ்வாய்க்கிழமை- சினிமா விமர்சனம்

செவ்வாய்க்கிழமை

பாயல் ராஜ்புத், நந்திதா ஸ்வேதா, அஜ்மல் அமீர், மற்றும் பலர் நடிப்பில் அஜய் பூபதியின் கதை, திரைக்கதை, இயக்ககத்தில் உருவாகியுள்ள படம் செவ்வாய்க்கிழமை.

ஒரு கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அங்குள்ள சுவர் ஒன்றில்ஒரு சிலரின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும், அந்த பெயரில் உள்ளவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அடுத்தடுத்த செவ்வாய்கிழமைதோறும் இதே போன்ற சம்பவங்கள், தொடர்கதையாக அங்கு நிகழ அந்த ஊரின் மக்கள் பயம் கொள்ளுகிறார்கள் இந்த தொடர் வழக்கை விசாரிக்க அங்கு வரும் நந்திதா ஸ்வேதாஇந்த சம்பவங்கள் குறித்த விசாரணையில் ஈடுபடுகிறார், அந்த ஊரில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் சம்பவங்களுக்கு பின்னணி என்ன? குறிப்பிட்ட அந்த செவ்வாய்க்கிழமைக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? போன்ற பல வினாக்களுக்கு விடை சொல்லுகிறது மீதி படத்தின் கதை.

கதையின் நாயகியாக நடித்துள்ள பாயல் ராஜ்புட் துணிச்சலான கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா காவல்துறை அதிகாரியாக ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு வலு செரிக்கும் வண்ணம் சிறப்பாக நடித்துள்ளார் மேலும் கல்லூரி பேராசிரியராக அஜ்மல், ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ்,லட்சுமண் என பலரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

எடுத்துக்கொண்ட கதைக்கு பொருத்தமாக தெளிவான திரைக்கதையுடன் சிறந்த படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் அஜய் பூபதி. இயக்குனருக்கு பக்கபலமாய் தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவும், குல்லப்பள்ளி மாதவ் குமாரின் படத்தொகுப்பும், மோகன் தல்லூரியின் கலைஇயக்கமும் உற்ற துணையாய் நின்றுபடத்தின் சிறப்புக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

செவ்வாய்க்கிழமை படத்தின் மைய நாடியாக படத்தின் இசை அமைந்துள்ளது அந்த இசைமற்றும் பின்னணி இசையை அஜனீஷ் லோக்நாத் சிறப்பாக வழங்கியுள்ளார், இவரே காந்தாரா படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பங்களிப்பு படத்தின் சிறப்பான கதை நகர்வுக்கு பெரிதும் உதவியுள்ளது.

செவ்வாய்க்கிழமை எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்.

Spread the love