இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான இந்த 800ல் அவரது வாழ்வியல் நிகழ்வுகள் பதிவாக்கபட்டு காட்சி வடிவில் காட்டப்பட்டுள்ளது .
இலங்கையில் இந்தியத் தமிழர் குடும்பத்தில் பிறந்த முரளிதரன் தனது பெற்றோரால் அங்குள்ள ஒரு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார், கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட முரளிதரன் படிக்கும் காலங்களில் விளையாட கிடைத்த வாய்ப்பை கொண்டு பள்ளிகாலங்களில் துவங்கி, உலக அரங்கில் வெற்றி வலம் வரும் காலம் வரை நடக்கின்ற வாழ்க்கை சம்பவங்களை கதை வடிவில் சொல்லுகிறது 800.

முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாய் மதுர் மிட்டல் நடித்துள்ளார், இவரது யதா ர்த்தமான நடிப்பும் அசல் நாயகனை ஒத்த தோற்றமும் கிரிக்கெட் ரசிகர்களையும் , சினிமா ரசிகர்களையும் ஒரு சேர கவரும் வகையில் உள்ளது. முரளிதரனின் தந்தையாக முத்தையா என்னும் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தியும் மற்றும் வடிவுக்கரசி ,நாசர், ஜானகி சுரேஷ், நரேன்,மகிமாநம்பியார் போன்றோரும் தத்தம் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்.
படத்தின் இயக்குநர் ஸ்ரீபதி,வாழும் காலத்தில் உள்ள ஒருவரின் வாழ்வியலை இயன்றவகையில் திரைமொழியில் உருமாற்றி படமாக்கியுள்ளார்.இயக்குனரின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் போன்றவர்களின் தொழிநுட்பமும் நன்கு அமைந்துள்ளது கதையின் காட்சிகளுக்கு இணையாக ஜிப்ரானின் பின்னணி இசை படம் முழுவதும் பயணிக்கிறது.
800 படத்தை இந்த தலைமுறையினர் கொண்டாடுவார்கள் என்று நம்புவோம்
