தன்னுடைய மனைவியை இழந்த பிறகு தன் மகளுடன் கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் ரஞ்சித்(விஜய் ஆண்டனி) ஒருகாலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர், அவரது நண்பர் செழியன் சென்னையில் மர்ம நபர் ஒருவரால் பத்திரிகை அலுவலகத்திலேயே கொலை செய்யப்படுகிறார் . பத்திரிகை நிறுவன உரிமையாளர் நிழல்கள் ரவியின் வேண்டுகோளின்படி மீண்டும் சென்னைக்கு வரும் ரஞ்சித், செழியனின் கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்குகிறார் .அதன்பின்புதான் செழியனின் கொலைக்கு பின்னால் இருக்கும் பல தகவல்களை அறிந்துகொள்ளுகிறார் இந்த கொலைகளின் பின்னணியை ரஞ்சித் கண்டுபிடித்தாரா ? என்பதே ‘ரத்தம்’ படத்தின் மீதி கதையாகும்.

முன்னாள் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் ஆக ரஞ்சித் என்னும் கதாபாத்திரத்தில் எப்போதும் போல வழக்கமான நடிப்பை அவருக்கே உரித்தான பாணியில் விஜய் ஆண்டனி வழங்கியுள்ளார் மேலும் நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், நிழல்கள் ரவி என மற்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வண்ணம் குறைவின்றி நடித்துள்ளார்கள்

இதற்க்கு முன் தான் இயக்கிய படங்களிலிருந்து மாறுபட்ட புலனாய்வு திரில்லர் கதையுடன் களம் இறங்கியுள்ளார் சிஎஸ் அமுதன்.தான் எடுத்துக்கொண்ட கதைக்கான, விறுவிறுப்புடன் காட்சிகளை திரைக்கதையில் இன்னமும் இணைத்திருந்தால் இயக்குனருக்கு தன்னுடைய புதிய பாணியிலும் வெற்றிகிட்டியிருக்கும் ,கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் ,டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பும், கதைக்கேற்ற காட்சிகளை பதிவு செய்தும், கதையோடு பயணித்தும் உள்ளது. கண்ணன் நாராயணனின் இசை கதையோட்டத்துக்கு துணையாக நின்றுள்ளது.
புலனாய்வு திரில்லர் பாணியில் வெளிவந்துள்ள ரத்தம், ஆக்ஷன் பாணியை விரும்பும் ரசிகர்களை கவரலாம்.
