Thursday, April 16

சந்திரமுகி 2 -விமர்சனம்

17 ஆண்டுகளுக்கு முன்பு, 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் (Chandramukhi 2) வெளியாகியுள்ளது.

காட்டன் மில் உரிமையாளரான ரங்கநாயகி (ராதிகா) யின் குடும்பத்தில் தொடர்ந்து பல விதமான விரும்பத காத சம்பவங்கள் நடைபெறுவதால், குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) சொல்படி, குலதெய்வ கோயிலை புதுப்பித்து வணங்கிட அவர்களது ஊருக்குச் செல்கிறார்கள். இந்த பணிகள் முடியும் வரை சந்திரமுகி பங்களாவில் தங்குகிறார்கள் இவர்களுடன் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அங்கு வருகிறார். அந்த அரண்மனையில் இவர்கள் தங்க ஆரம்பித்த பிறகு பல அமானுஷ்யமான சம்பவங்கள் அங்கு நடக்கிறது. அதனை அந்த குடும்பத்தார் எப்படி எதிர்கொண்டார்கள் இவர்களின் இந்த சூழ்நிலையில் சந்திரமுகி, வேட்டையனுக்கும் என்ன தொடர்பு ?அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளின் பின்புலம் என்ன? என்பதே என்பதே சந்திரமுகி 2படத்தின் மீதி கதை…

கதையின் நாயகனாய் பாண்டியன் மற்றும் வேட்டையனாக ராகவாலாரன்ஸ் நடித்துள்ளார் ரஜினியை இமிடேட் செய்து நடித்துள்ளார்.மற்றபடி முந்தைய தன் படங்களிலும் தான் வெளிப்படுத்திய அதே விகிதத்தில் நன்கு நடித்துள்ளார், ராதிகா சரத்குமார் ரங்கநாயகி என்னும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை தனக்கே உரிய பாணியில் கொடுத்து நடித்துள்ளார் ,

வைகைப்புயல் வடிவேலு முதல் பாகத்தில் வந்த அதே முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் நம்மை கவர்ந்த அளவுக்கு இதில் நம் கவனத்தை அவரது கதாபாத்திரம் பெறவில்லை , மஹிமா,லக்‌ஷ்மி மேனன் போன்றோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் குறைவின்றி நடித்துள்ளார்கள். ஆனால் முதல் பாகத்தில் சந்திரமுகியாக நம்மை பெரிதும் கவர்ந்த ஜோதிகாவின் இடத்தை கங்கனா ரணாவத்தை கொண்டு பார்க்கும்போது அதில் சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது.

முதல் பாகத்தின் பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து இருப்பவை, இந்த இரண்டாம்பாகத்தில் அதிலும் சற்று ஏமாற்றமே, ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது கீரவாணியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இன்னமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்க வைக்கும் வகையில் உள்ளது.

சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை இயக்கி பெரும் வெற்றிகண்ட இயக்குநர் பி.வாசு, இதில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்தால் தொடர் வெற்றியில் அவரின் பெயரையும் சேர்த்து இருக்கும், .தோட்டத்தரணியின் கலை இயக்கமும் , ராஜசேகரின் ஒளிப்பதிவும், கதை நிகழும் தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் வகையில் சிறப்பாகவுள்ளது.

முதல் பாகத்தின் மறுஉருவாக்கத்தை தவிர்த்து, முதல் பாகத்தின் மீட்சியாக படத்தை அமைத்து இருந்தால் இந்த சந்திரமுகியும் காலஓட்டத்தில் நிலைத்து நின்றிருப்பாள்,முதல்பாகத்தினுடன் ஒப்பிட்டுப்பார்க்காமல் தனிப்பட்ட படமாக பார்க்கும் ரசிகர்களை இந்த சந்திரமுகி நிச்சயம் கவர்வாள்.

Spread the love