Wednesday, April 22

எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – திரைப்பட விமர்சனம்

எளிய கிராமங்களில் இருந்து தேசிய,சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சாதனைகளை படைப்பதற்க்கு ஆர்வத்துடன் முயற்சியும்,தேவையான பயிற்ச்சியும் எடுக்க விரும்பும் சாதரணமான பின்புலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், எவ்வாறு அந்த விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் என்பதை அடிப்படையாக கொண்டும், அதன் பின்னால் உள்ள அரசியலையும் பேசும் படமாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.


கால்பந்தாட்ட வீரராக இருக்கும் கதையின் நாயகன் கர்ணா, கால்பந்தாட்டத்தில் கால்பந்தாட்டத்தில் தன் குழுவுடன் சாதிக்கவேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர் ,கால்பந்தாட்ட பயிற்சியாளராக ‘அருவி’ மதன்,அவரின் முயற்சியால் தனது இலட்சியத்தை அடையும் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள், சிறப்பான கால்பந்தாட்ட வீரர்களாக உருவானதோடு, கால்பந்தாட்ட தொடரில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றாலும் . அவர்களின் முன்னேற்றத்தை விரும்பாத முதலாளி வர்க்கத்தினர்,அவர்களின் வளர்ச்சியை தடுக்கும் வண்ணம் சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்களின் சூழ்ச்சி சதியினை  வீரர்கள் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்களா? இல்லையா ?அதன் பிறகு நடந்தது என்ன ? என்பதுதான் ‘எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் கதை.

இத்திரைப்படத்தில் எளிமையான சராசரி இளைஞனாக சரத் ,இளம் நாயகியாக ஐரா இருவரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு உரிய வகையில் குறைவின்றி நடித்துள்ளார்கள். மேலும் கஞ்சா கருப்பு, அருவி மதன் மற்றும் சோனா ,நரேன் , இளையா மற்றும் பலர் திரைப்படத்தின் நன்கு நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தினை இயக்குனர் செ.ஹரி உத்ரா அவர்கள் எழுதி இயக்கியுள்ளார், எளிய மனிதர்களின் திறமைக்குத் தடை போட துடிக்கிற அதிகார வர்க்கத்தின் மீது சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் இளையவர்களின் உணர்வுகளை சித்தரிக்கும் கதைகளைத்தை கொண்டு, நல்ல படத்தினை இயக்குனர் உருவாக்கியுள்ளார், இவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவு வினோத் ராஜாவும் , இசைஅமைப்பாளர் AJ அலிமிர்சாக்கும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்கள்.

விளையாட்டையும் திரைப்படத்தையும் ஒன்றாக விரும்புவர்களுக்கு, இந்த குழு நிச்சயம் மனதில் இடம் பிடிக்கும் .

Spread the love