Tuesday, September 22

குஷி- விமர்சனம்

அரசு வேலைக்காக காஷ்மீர் செல்லும் விப்லவ்(விஜய தேவர்கொண்டா) அங்கு ஆராத்யாவை(சமந்தா) பார்த்ததும் காதல் வசப்படுகிறார் ,அவரது காதலை ஆராத்யாவும் ஏற்று கொண்டாலும் விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோர்களின் நம்பிக்கையால் பிரச்சனை ஏற்படுகிறது, ஆனால் விப்லவ் -ஆராத்யா,அதனை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டு தங்களது மண வாழ்க்கையை தொடங்குகின்றார்கள்.ஆனால் அதற்க்கு பிறகு அவர்கள் இல்லற வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுகின்றன,இறுதியில் அவர்கள் …. ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதி கதையாகும்.


கதையின் நாயகன் விப்லவாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, ரொமான்ஸ் ஆக்ஷன் ,என அனைத்து காட்சிகளிலும் நன்கு நடித்துள்ளார்.ஆராத்யாவாக சமந்தா கதையின் நாயகியாக கதாபாத்திரத்துடன் ஒன்றி நன்கு நடித்துள்ளார்


அழகான காதல் கதையில் ,காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து நிறைவான படமாக இயக்குநர் ஷிவா நிர்வானா உருவாக்கியுள்ளார்.

மேலும் சச்சின் கெட்டேகர், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா ,ரோஹினி, ஜெயராம் போன்றோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றவகையில் நன்கு நடித்துள்ளார்கள்.

முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இனிய காட்சிகளை பதிவு செய்துள்ளது , ‘என் ரோஜா நீயா’, ‘ஆராத்யா’ பாடல்களின் மூலம் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

இளைய தலைமுறையினர்களின் இதயத்தில் இந்த ‘குஷி’க்கு நிச்சயம் இடமுண்டு.

Spread the love