Tuesday, April 21

டைனோசர்ஸ்- விமர்சனம்

ரவுடிக்கு கூட்டாளியாயிருந்த ஒரு காரணத்துனால ஜானகியோட கணவன் கொலை செய்யப்படுறாரு, இதனால தன்னோட இரண்டு பிள்ளைகளையும் அந்த பக்கமே போகவிடாம வளர்க்குறாங்க. பெரிய பையன் ரிஷி டைலர் கடை வைத்துயிருக்கறாரு . சின்ன பையன் உதய் கார்த்திக் அவருக்கு பிடிச்ச வேலைய செய்றாரு. ஒரு பக்கம் friends, ஸ்ரீப்ரியாதேவாவை follow up பண்றதுமா ஜாலியா இருக்காரு. அந்த பகுதியில உள்ள பெரிய ரவுடியான மானேக் ஷாவிடம் அடியாளாக ரிஷியோட உயிர் நண்பன் மாறா இருக்க, அவர் தற்போது கல்யாணம் பண்ணிக்கிட்டு திருந்தி வாழணும்ன்னு நினைக்கிறாரு. முன்னாடி நடந்த ஒரு கொலைக்காக போலீஸ் மானேக் ஷாவிடம் எச்சரித்துவிட்டு போக, அந்த கொலைக்கு சம்பந்த பட்டவங்களை சரணடைய சொல்றாரு. இந்த கும்பல்ல மாறாவும் இருக்க, தன் நண்பனுக்காக அவருக்கு பதிலாக ரிஷி ஜெயிலுக்கு போறாரு..தன்னோட தங்கச்சி வீட்டுக்காரரை கொன்னவங்க எல்லாரும் ஜெயிலுக்கு போட்டாங்கன்னு இன்னொரு ரவுடியா இருக்குற அருண் ஓரளவுக்கு சமாதானம் ஆகுறாரு, ஆனா அந்த கொலைக்கு சம்பத்தப்பட்ட மாறா வெளிய இருக்குறது தெரிய வர அவரை கொலைசெய்றாரு, இந்த கொலைவட்டத்துக்குள் உதய் கார்த்திக் யதார்த்தமாய் சிக்குறாரு. அந்த வட்டத்துக்குள் உதய்க்கு சில உண்மைகளும் தெரியவருது. மாறா கொலைக்கு யார் காரணம்? அந்த வட்டத்துக்குள் சிக்கிய உதய்க்கு என்ன ஆனது ?என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி.

உதய் கார்த்திக் நடிப்பு வெகு இயல்பு. நடிப்பு மட்டும் துடுப்பானது மட்டும் அல்ல அவர் பேசும் வசனங்களும் அப்படியே. முதல் பாதியில ஜாலியாகயும் , இரண்டாம் பாதியில திரைக்கதைய பெரும்பாலும் தாங்கியும் செல்கிறார். இதேபோல மாறா முதல் பாதியை விறுப்பாக தன் நடிப்பின் மூலம் கொண்டு சென்று நம்மை கவர்ந்து அமர வைத்து இருக்கிறார்.…
ஸ்ரீ ப்ரியாதேவா நடிப்பும் அழகு. அதே போல ரிஷி தனக்கு கொடுத்த காட்சிகளை சிறப்பா செய்து இருக்காரு. இவரை போலவே ஜானகியும் தான்.

ரவுடியாக மானேக் ஷா மற்றும் அருண் இருவரின் நடிப்பும் யதார்த்தம். இவங்க மட்டும் இல்லாம படத்துல friends ஆக நடிச்சவங்க, மானேக் ஷா மற்றும் அருண் இருவரின் உதவியாளர்களாக நடித்து இருப்பவர்களும் படத்துக்கு பக்கா பலமா இருக்காங்க.

கதைக்கு ஏத்த ஜோன்ஸ் வி.ஆனந்தின்ஒளிப்பதிவுக்கும் , கதையை விட்டு விலகாத போபோ சசியின் இசைக்கும் பாராட்டுக்கள்.

பொதுவா வடசென்னை களத்தில் வரும் அறிமுக காட்சிகள் இல்லாமல், காட்சிகளை சுவாரஸ்யமான முறையில் விறுவிறுப்பாக அமைத்து, வடசென்னை களத்தில் வந்த படங்களில் இருந்து மாறுபட்ட வகையில் படத்தை உருவாக்கியுள்ளதோடு , வசனங்களை நகைச்சுவையாகயும், சில நேரத்தில் நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் படைத்துள்ள அறிமுக இயக்குநர் மாதவனுக்கு பாராட்டுக்கள். பல படத்துல சொல்ல பட்ட கதை களம், மிக பெரிய நட்சத்திர பலம் இல்லை, இருந்தாலும் கதையையும், இயக்குநரை நம்பி படத்தை தயாரித்த ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Spread the love