படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “என்று பெயர் வைத்துள்ளார்கள் .

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் ஸ்வேதாவும் ரக்சிதாவும் நண்பர்களாக உள்ளார்கள். இதில் ரக்சிதா 66 ஆவது எண்ணில் தனது கணவர் சபரியுடனும் .99 ஆவது எண்ணில் ஸ்வேதாவும் வசிக்கிறார்கள் ,ரக்சிதாவை அவரது கணவர் பலமுறை கொலை செய்யும் முயற்சிகளில் அவர் தப்பித்துவிடுகிறார் .இந்த சூழலில் ஒரு சமயம் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை அறிந்த ரக்சிதா அங்குள்ள பிற நபர்களுடன் சேர்ந்து காப்பாற்ற செல்லும் பொழுது ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் குறிப்பிட்ட அந்த 99 ஆவது வீட்டில் யாருமே தற்பொழுது வசிக்கவில்லை என்பது தெரிகிறது அப்படி என்றால் ஸ்வேதா யார் ? அவர் ஏன் ரக்சிதாவுக்கு மட்டும் தெரிந்தார் ? அவர்களுக்குள் ஏன் சந்திப்பு நிகழ்ந்தது ?என்பதே படத்தின் மீதி கதை.
இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அவரவர்கள் ஏற்றுள்ள கதாபாத்திர ங்க்ளுக்கு உரிய வகையில் குறைவில்லா நடிப்பை கொடுத்துள்ளார்கள். மற்றும் பவன்கிருஷ்ணா, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க பவனி வருகிறார்கள்.,இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தியும் நடித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் சம்பவங்களை ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா தன்னுடைய நேர்த்தியான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்புகளின் வாயிலாக சிறப்பாக படமாக்கி உள்ளார்.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்ததோடு இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார் எம்.எஸ்.மூர்த்தி .அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்கள், அதன் பின்னணியில் உள்ள மர்மம் இவற்றை ஹாரர் கலந்த குடும்ப கதையாகயாக்கி ஆர்வத்துடன் . பார்க்கக்கூடிய வகையில் படமாக்கி உள்ளார் மூர்த்தி அவர்கள்
மொத்தத்தில் அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஹாரர் படம் அந்த தரப்பு ரசிகர்களையும் கவரும்
