City light pictures தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”
வெண்ணிலா கபடி குழு ஜீவா பாண்டியநாடு ,பாயும் புலி என பல தமிழ் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி” .
பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்து கல்லூரி வரை நண்பர்களாக இருக்கும் கார்த்திக் (ஜெகவீர்) மோனிகா (மீனாட்சி) இருவரையும் காதலர்கள் என்று பிறர் நினைத்தாலும் அவர்கள் தங்களது நட்பை தொடர்ந்து வருகிறார்கள் .இந்த சூழ்நிலையில் கார்த்திக்குக்கு பவித்ரா என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது மோனிகா-கார்த்திக் இருவரின் நட்பு பவித்ராவிற்கு பிடிக்கவில்லை அதனால் அவருடைய நட்பை கைவிடும்படி கார்த்திடம் பவித்ரா கேட்கிறார் ஆனால் கார்த்திக் மோனிகாவுடனான நட்பை விட விரும்பவில்லை அதின் பின் பவித்ராவின் நிலை என்னவானது ?கார்த்திக்- மோனிகா நண்பர்களாகவே தங்களது வாழ்க்கையை தொடர்ந்தார்களா இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை
கதையின் நாயகனாக கார்த்திக் என்னும் கதாபாத்திரத்தில் ஜெகவீர் நடித்துள்ளார்.அவருடன் மோனிகா என்னும் கதாபாத்திரத்தில் மீனாட்சி நடித்துள்ளார் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள்.,இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், மற்றும் பலரும் தத்தம் கதாபாத்திரங்களில் தேவைக்கேற்ப குறைவில்லா நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

காதலையும் நட்பையும் இரண்டு கண்களாக பாவிக்கும் இளைஞர்களின் வாழ்வியல் சூழலை படமாக்கி உள்ளார் இயக்குனர் சுசீந்திரன் ,முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களை கவரும் நோக்கத்தோடு காட்சிகளை அமைத்துள்ளார் ,அவருக்கு உறுதுணையாக் பாடல்களிலும், பினாமி இசையிலும் இசையமைப்பாளர் டி இ மான் பெரும் பங்களிப்பை கொடுத்துள்லர் . இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் வி எஸ் ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைக்கப்ட்டுள்ளது.
2Kக்கு மட்டுமல்ல 90s சும் பார்த்து ரசிக்கலாம்.
