விக்ராந்த் ரோணா- திரை விமர்சனம்
ஒரு ஊரில் உள்ள ஒரு பழமையான வீட்டில் உள்ள கிணற்றிலிருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதோடு குழந்தைகள் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. அந்த காட்டுக்குள் இருக்கும் தீயசக்தி இதை செய்ததாக அந்த நம்புகிறது ஊர்.அந்த கிராமத்தைச் சேர்ந்த காவலதிகாரியும் அந்த வீட்டிற்குச் சென்றபோது, கொல்லப்பட்டு அவரது உடல் பகுதி மட்டுமே உள்ளது, இந்த கொலைகள் எதற்காக நடைபெற்றன ? என்பதை கண்டறிய புதிதாக அந்த ஊருக்கு வரும் காவல் துறை அதிகாரி ‘விக்ராந்த் ரோனா’ (கிச்சா சுதீப்) இது தொடர்பான விசாரணையில் இறங்கி இந்தக் கொலைகள் ஏதேனும் அதிசய சக்தியால் நடக்கிறதா ? அல்லது யாரேனும் தனி மனிதனால் நடக்கிறதா? என்பதை சொல்லும் படம்தான் ‘விக்ராந்த் ரோணா’.
விக்ராந்த் ரோனாவாக கிச்சா சுதீப். துணிவான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், Action காட்சிகளில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், இரண்டாவது ஹீரோ என்றளளவில் வரும் நிரூப் பண்டாரியும் தன பங்குக்கு காதல் மற்றும் சண்டைக்காட்சிகளில் நிறைவாய் நடித்துள்ளார் மற்றும் நடிகர்கள் மதுசூதன் ராவ் , நீதா அசோக் , இயக்குனர் பிரியா, ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என பலரின் பங்களிப்போடு நகரும் படத்தில் வில்லியம் டேவிட்டின் 3D தொழில் நுட்ப ஒளிப்பதிவும் அஜனீஸ் லோகநாத்தின் இசையும் இயக்குனர் அனூப் பண்டாரிக்கு கை கொடுத்திருக்கின்றன .
பிரம்மாண்டமான பட்ஜெட் செலவில் 3 D தொழில்நுட்பத்தில் , அட்வென்சர், அதிரடி சண்டை காட்சிகள் கலந்த இந்த திரில்லர் படம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .