‘ருத்ர மஹாவீர உக்ரசேனராக இருக்கும் லாலுக்குத் தீராத விக்கலினால் பிரச்னைகள் ஏற்பட்டு அதன் காரணமாய் அவர் தன்னுடைய ஆட்சியை கூட சரியாக நிர்வகிக்க முடியாத நிலை சூழ்நிலை அமைகிறது தன்னுடைய பிரச்னையிலிருந்து விடுபட ஒரு பேரழகியை கொண்டு வருமாறு தன் அமைச்சருக்கு ( ஆசிப் அலி) அரசர் உத்தரவிடுகிறார்.நவீன காலத்தில் சுவாமி அபூர்ணாநந்தன் மீது (நிவின் பாலி) கோயிலின் சிலை ஒன்றைத் திருடியதாக குற்றம் சுமத்தப்பட, வழக்கு கோர்ட்க்கு வர நீதிபதி (சித்திக்) முன் நிறுத்தப்படும் சுவாமி குற்றவாளியா அல்லது குற்றம் அற்றவரா என்ற வழக்கு படத்தின் எஞ்சிய கதையை கொண்டு செல்கிறது
அபூர்ணாநந்தனாக நிவின் பாலி அமைச்சர் வீரபத்ரனாக ஆசிப் மற்றும் ஷான்வி ஸ்ரீவஸ்தவாவும் திறம்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரமான மகாராஜாவாக நடித்திருக்கும் லால் மற்றும் சித்திக் நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் இருவரின் பண்பட்ட நடிப்பு பாராட்டுகளை அள்ளிச்செல்கிறது . வழக்கு , விசாரணை, டைம் டிராவல், பேன்டஸி, என அனைத்தும் கலந்த சிறந்த படம்தான் இந்த ‘மஹாவீர்யர்.’
இரண்டு கால கட்டத்தில் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜின் பங்களிப்பு மற்றும் இசை அமைப்பாளர் இஷான் சாப்ராவின் இசை இவ்விரண்டும் திரைக்கதைக்கு உற்ற துணையாய் அமைந்துள்ளன. எம் முகுந்தன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த டைம் டிராவல் ஃபேண்டஸிக்கு திரைக்கதை இயக்கம் தந்து திறம்படஇயக்கியுள்ளார் இயக்குனர் அப்ரிட் ஷைன்
வித்தியாசமான கதை விரும்பிகளுக்கு விருந்தாய் அமையும் இந்த ‘மஹாவீர்யர்.