ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பங்கள் பார்க்கும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டான கதையாக நிச்சயம் இது இருக்கும்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,
எடிட்டிங்: ராஜா முகமது,
கலை இயக்கம்: ஆண்டனி,
பாடல் வரிகள்: விவேகா- மணி, அமுதவன். A, சற்குணம்,
ஆடை வடிவமைப்பு: நடராஜ்,
ஒப்பனை: சசி குமார்,
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,
நடனம்: பாபி ஆண்டனி- ஷெரிஃப்,
தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,
படங்கள்: மூர்த்தி மெளலி,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: சுப்பு நாராயணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)
லைகா புரொடக்ஷனின் தலைமை G.K.M. தமிழ்க்குமரன் இந்தப் படத்தை மேற்பார்வை பார்க்கிறார்