தயாரிப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்ததோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் ஜோதி.
ஜோதி படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், ‘மைம்’ கோபி, சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, ஆகியோர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – A.V.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – செசி ஜெயா, இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா,
நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு(ஷீலா ராஜ்குமார்) குழந்தைப்பேறு பெற இன்னும் சில நாட்களே உள்ள சூழ்நிலையில், இரவு நேரத்தில் அவருடைய வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் குழந்தை எடுக்கப்பட்டு திருடப்படுகிறது ஷீலாவின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் கதாநாயகன் வெற்றி. அவரது மனைவி க்ரிஷா குரூப் இவர்களுக்கு குழந்தை இல்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஷீலாவைவை, க்ரிஷா குரூப் கவனமாக மாக பார்த்துக் கொள்கிறார் ஷீலா வீட்டில் நடந்த சம்பவத்தை க்ரிஷா குரூப், தன் கணவர் வெற்றியிடம் சொல்கிறார்.அந்த குழந்தை கடத்தபட்டது யாரால் ? எதற்காக? என்ன நடந்தது போன்ற எல்லா வினாக்களுக்கும் விசாரணை மூலம் பல விடைகளை கொடுக்கும் கதைதான் ‘ஜோதி’ படத்தின் கதை.
பச்சிளம் குழந்தை என்றும் பாரபட்சம் பாராமல் பச்சை வியாபாரம் செய்யும் கூட்ட த்தின் கதை, இது கருவறையில் ஆயிரம் கற்பனைகளையும், கனவுகளையும் சுமப்பத்தோடு , கூடவே பிள்ளையையும் சுமந்து பெற்ற தாயின் வலி அறியாது குழந்தை கடத்தலில் ஈடுபடும் இரக்கமற்றவர்களை கண்டுபிடிக்கும் கனமான கதையினை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் A.V.கிருஷ்ண பரமாத்மா
‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று படத்தின் நாயகனாகவும், கதையின் நாயகியாக ஷீலாவும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள் ‘மைம்’ கோபி, கிரிஷா குரூப் என பலரும் தங்களின் பங்குக்கு சிறந்த நடிப்பை வழங்கி உள்ளார்கள்
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில், யேசுதாஸ் குரலில், கார்த்திக் நேத்தாவின் வரிகளில் ஒலிக்கும் ‘யார் செய்த பாவமோ’ பாடல் ரசிகர்களின் இதயத்தை தொடும் வகையில் சிறப்பாக உள்ளது
பொழுதுபோக்கும், விழிப்புணர்வும் நிறைந்த ஜோதி நிச்சயம் ஒளிரும் சுடர்தான். .