நடிகர் திலகம் நடிப்பில் திரையுலகை அலங்கரித்த முதல் திரைப்படம் பராசக்தி, கடந்த 1952, அக்டோபர் 17 அன்று தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியானது.பராசக்தி வெளியாகி 70 ஆண்டுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது
ஒரு குடும்பக்கதையை தனது திரைக்கதை, வசனத்தால் திறம்பட பட்டை தீட்டி அவற்றை வைர வரிகளால் ஒளிரச்செய்தவர் கலைஞர் மு.கருணாநிதி. திரையுலகில் நுழைய விரும்பும் அக்கால இளைஞர்களுக்கு பராசக்தி வசனங்களே அடையாள அட்டையாய் திகழ்ந்தன.
கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. ஏ . பெருமாள் ஆகியோர் ஆகும்
நடிகர்திலத்தின் முதல் படம் என்ற பெருமையை மட்டும் இப்படம் பெற்றிருக்கவில்லை ,அதோடு கூட பல சமூக கருத்துகளை விதைத்த முன்னோடி படமாகவும் இன்றளவுக்கும் திகழ்கிறது.