Wednesday, June 19

பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு, கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி

Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து ‘Keep a Bowl’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்பட்டது. தமிழகத்தின் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு, ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chair Person Savera Group of Hotels, ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சேவ் சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் சாயா தேவி, சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி உரையாற்றி, விருந்தினர்களை கௌரவித்தார்.

இந்நிகழ்வினில் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கூறியதாவது..,

“சமீபத்தில், வானிலை ஆய்வுத் துறையினுடைய அதிகப்படியான தட்பவெப்ப வெப்பநிலை, வெப்ப அலைகள் மற்றும் மனிதர்கள் நிலைமையை சரியாகக் கையாளுவதற்கான முன்னெச்சரிக்கையான “Beat the Heat”” என்ற அறிக்கையை நாங்கள் கண்டோம். நமது செல்லப்பிராணிகளும் அதே சிகிச்சைக்கு தகுதியானவை, மேலும் தெரு விலங்குகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான Save Shakti Foundation சார்பில் வரலட்சிமி சரத்குமார் மற்றும் சாயாதேவி மேடம் இணைந்து இந்த “Keep a Bowl” என்ற முயற்சியை Royal Canin உடன் இணைந்து தொடங்கியுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது புகழ்பெற்ற நிதியமைச்சர் டாக்டர். பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தனது ஓய்வில்லாத வேலைகளை மீறி இந்த நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று. நமது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு வழங்குவதை நாம் எப்போதும் பின்பற்றி வருகிறோம். அதே முறையில், இந்த உயிரினங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீரை வழங்குவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தெருநாய்களுக்குக் குடிப்பதற்குச் சரியான தண்ணீர் கிடைக்காதபோது, ​​தண்ணீருக்காக சாக்கடையைச் சுற்றிச் சென்று, இறுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அந்த உயிரனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில் இந்த முயற்சியை Save Shakti Foundation உருவாக்கியுள்ளது. நமது அமைச்சர் அவர்களே விலங்குகளின் நலனுக்கான ஒருவராக இருந்துள்ளார். இந்த முயற்சிக்கு நான் முழு குழுவையும் வாழ்த்துகிறேன். செல்லப்பிராணிகளை நாம் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தியைப் பரப்பி பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை ஊடகங்கள் ஏற்க வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை காருக்குள் சில நிமிடங்கள் கூட பூட்டி வைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விலங்குகளின் நலனுக்காக ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பேற்க வேண்டும். மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காக, கோவிட்-19 க்கு ஒவ்வொருவரும் எப்படி தடுப்பூசி போட்டார்களோ, அதுபோல, உயிரினங்களுக்கு உதவ நாம் முன்னோக்கிச் சென்று ஒரு சமூகமாக நாம் செயல்பட வேண்டும். இந்த முயற்சியைத் தொடங்குவதன் மூலம் இந்த உலக கால்நடை தினமான 2022யை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்காக சேவ் சக்தி அறக்கட்டளை சாயா, மற்றும் ராயல் கேனின் ஸ்ரீமதி நீனா ரெட்டி மாம் ஆகியோருக்கு நான் நன்றி கூறிகொள்கிறேன்.”

 

சாயா தேவி, Save Shakti Foundation, கூறியதாவது….
“இன்று 1000 கிண்ணங்களுடன் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ள நபர்கள் கூகுள் லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம், எங்களது சமூக ஊடகப் பக்கங்களில் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும், அவர்களுக்கு அருகில் உள்ள இடத்தில் நடக்கும் போது அவர்கள் அங்கு கிண்ணங்களை பெற்றுகொள்ளலாம். முதற்கட்டமாக சென்னையில் எங்களது முயற்சியை தொடங்கி விரைவில் பல இடங்களுக்கு இதனை பரப்பவுள்ளோம். ஒவ்வொருவரும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தங்களது வீட்டு வாசல், ஜன்னல் ஓரங்கள் மற்றும் மொட்டை மாடிக்கு வெளியே ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வழங்குவதை தாங்களாகவே பின்பற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய சிறிய பங்களிப்பு இந்த உயிரினங்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.”

ஆஷுடோஷ், Royal Canin, கூறியதாவது….,
“செல்லப்பிராணிகள் எப்போதும் நமக்காக ஒரு நல்ல உலகத்தை உருவாக்குகின்றன, நாமும் அவர்களுக்காக அதையே செய்ய வேண்டும். Royal Canin ல் நாங்கள் பல ஆண்டுகளாக பூனைகள் மற்றும் நாய்களுக்கு சூப்பர் பிரீமியம் உணவுகளை வழங்கி வருகிறோம். தடுப்பூசி, நிலைப்படுத்துதல் மற்றும் விலங்குகளின் மேம்பாட்டிற்கான பல பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு உன்னத முயற்சிகளுக்காக சேவ் சக்தி அறக்கட்டளையுடன் நாங்கள் இணைந்துள்ளோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த உயிரினங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அது நமக்கு ஒரு அற்புதமான சூழலை உருவாக்குகிறது.

ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chairman, Savera Group of Hotels, கூறியதாவது…,
“சாயா கூறியது போல், இந்த கடுமையான கோடையில் நாம் கூடியிருப்பது, எல்லோருக்கும் அசௌகரியமான ஒன்று தான். அதே சமயம், நமது குரலற்ற நண்பர்கள் எப்போதும் வெயிலில் இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த முயற்சியை எடுத்ததற்கு சேவ் சக்தி அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு சாயாவை 20 வருடங்களாகத் தெரியும், ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒன்று கூடுவது ஒரு நல்ல காரணத்திற்காகவே இருக்கும், அது கவர்ச்சியான அல்லது அர்த்தமற்ற சந்தர்ப்பங்களுக்காக ஒருபோதும் இருந்ததில்லை. இந்த ‘Keep a Bowl’ முயற்சிக்காக நாங்கள் இங்கு மீண்டும் ஒன்றாக இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெருநாய்களைப் பராமரிக்கும் செயல்களை பொறுத்தவரை சாயா ஒரு அற்புதமான நபராக இருந்தாள். எங்களின் கோட்டூர்புரம் நாய்கள் நலத் திட்டத்தைப் பற்றி சென்னைவாசிகளுக்குத் தெரிந்தால், அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சாயா உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு தெருவையும் ஒதுக்கியுள்ளார், மேலும் ரிவர் வியூ சாலையில் இருக்கும் 10-11 தெருநாய்களை நான் கவனித்துக்கொள்கிறேன், அங்கு ஒரு நாளைக்கு உணவு மற்றும் ஒரு கிண்ணம் தண்ணீர் போதுமானது. அவர்கள் மரங்களின் நிழல்களின் கீழ் அமைதியாக தூங்குகிறார்கள். சாயா அவர்களுக்கு அவ்வப்போது கருத்தடை செய்யப்படுவதை உறுதி செய்கிறார். கோவிட் நமக்கு நிறைய மதிப்புமிக்க படிப்பினைகளை அளித்துள்ளது, மேலும் மற்றவர்களின் நல்வாழ்வுக்கான நமது அன்பையும் உறவையும் உயர்த்தியுள்ளது.”

 

டாக்டர். பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், மாண்புமிகு நிதியமைச்சர் , தமிழ்நாடு கூறியதாவது…,
“உண்மையில், நான் மதுரையில் இருக்க வேண்டியிருந்தது, ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்தேன். தற்போதைய சூழ்நிலையில் இந்த முயற்சி மிகவும் முக்கியமானது. இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், மேலும் இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் மற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நமது தமிழ் கலாச்சாரம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது, அது கருணையினால் மட்டுமே முன்னேறியுள்ளது. தமிழ்நாடு பல்வேறு துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. எல்லாவற்றையும் தானாகச் செய்வது சாத்தியமில்லை என்பதை அரசாங்கமே உணர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக தெருநாய்கள் மற்றும் பிற உயிரினங்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நடந்து செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், தெருநாய்கள் அமைதியாக நடப்பதைக் காணலாம். ஓய்வாக தூங்கிவிட்டு, அங்குள்ள ஊழியர்கள், போலீஸ்காரர்களால் உணவளிக்கப்படுகிறது.
அவர் தொடர்ந்து மேலும் கூறுகையில், “குரல் இல்லாத உயிரினங்களுக்கு உதவ இந்த மேடையைப் பயன்படுத்தும் நபர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த ‘Keep a Bowl’ முயற்சியானது எந்த ஒரு கடும் வலிமை மிக்க உழைப்பையோ, பெரிய முதலீடையோ கோரவில்லை. ஒரு சிறிய பாத்திரம் அல்லது தண்ணீர் கிண்ணம் வைப்பது உயிரினங்களுக்கு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும். நமது கலாசாரத்தில் பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அதிக மதிப்பு கொடுக்கிறோம். உண்மையில், மற்ற மனிதர்களின் பசியை போக்குவது மிகப் பெரிய செயல், அதேபோல், இந்த விலங்குகளையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நிறுவனர்கள் மற்றும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”

Spread the love