Tuesday, December 3

‘தேஜாவு’-விமர்சனம்

வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் தேஜாவு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இதில் அருள்நிதி, மதுபாலா, அச்யுத்குமார், ஸ்மிருதி வெங்கட், சேதன், ராகவ் விஜய், காளி வெங்கட், மைம்கோபி,, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-பி.ஜி.முத்தையா, பாடல்கள்-விவேகா, படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த், கலை-வினோத் ரவீந்திரன், சண்டை-பிரதீப் தினேஷ்

காவல் நிலையத்துக்கு வரும் ஒரு எழுத்தாளர், தான் எழுதும் கதையில் வரும் பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர்களிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கேட்கிறார்.ஆனால் அதனை காவல் நிலையம் சீரியஸ் ஆக எடுத்துகொள்ளவில்லை மர்ம கும்பலால் பெண் ஒருவர் கடத்தப்பட காணாமல் போன பெண்ணைப் பற்றிய ஒரு வழக்கு விஷயமாக அவரை விசாரணை செய்கிறது கடத்தப்படும் அந்தப் பெண் பெரிய இடத்து பெண் என்பதால் நடந்தவை வெளியில் தெரியாமல் இருக்க தனியே, காவல் அதிகாரியான விக்ரம் குமார் (அருள் நிதி) நியமிக்கபடுகிறார்.அந்தப் பெண் எதற்காக, யாரால் கடத்தப்பட்டார்? அந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் எப்படி நிஜவாழ்வில் சாத்தியமாகிறது? என்ற பல புதிர்களுக்கு விடை சொல்லும் விதமான கதைக்களத்தை கொண்டதுதான் ‘தேஜாவு’.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அருள்நிதி இந்த படத்திலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்ற நடிப்பை சிறப்புடன் வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் கதாசிரியராக நன்கு நடித்துள்ளார் அச்யுத் குமார். அவருக்கு எம்.எஸ் பாஸ்கர் பின்னணிக் குரல் கொடுத்திருப்பது பெரிய பிளஸ் பாயிண்ட்.அழகன் ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ பாஞ்சாலக்குறிச்சி போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற மதுபாலா உயர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் காளி வெங்கட், ஸ்ம்ருதி வெங்கட், சேத்தன் போன்றோர் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி யுள்ளார்கள்
அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையினை சிறப்பாக படமாக்கியுள்ளார் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு பக்கபலமாய் இருப்பது ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகும் அதேபோல் இந்த படத்திற்க்கு பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் இசையும் கதையின் வேகத்திற்க்கு மேலும் வலு சேர்த்திருக்கின்றன

சஸ்பென்ஸ் கிரைம் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் நிச்சயம் திரைவிருந்தாய் அமையும்.

Spread the love