தனக்குள் இருக்கும் அதீத அக்னி சக்தி பற்றி தெரிந்து கொள்ள கதையின் நாயகன் எடுக்கும் முயற்சிகளும் வெவ்வேறு நபர்களிடம் பிரிந்து கிடக்கின்ற பிரம்மாஸ்திரத்தின் பாகங்களை சேர்த்து பிரமாஸ்திரத்தின் சக்தியை அடைந்து விட வேண்டும் என தீய சக்திகளை முறியடிக்கும் அம்சங்களும் இறுதியில் நாயகனுக்கும் பிரமாஸ்த்திற்கும் உள்ள தொடர்பு ? அவருக்குள் இருக்கும் சக்தி ? இவை போன்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது
‘பிரம்மாஸ்திரம்’ படத்தின் கதை. ரன்பீர் கபூர் ஆலியா பட்டை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வசப்படுகிறார் ரன்பீர் கபூர் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு ஏற்ற துணையாக அமைந்திருந்தது ஆலியா பட்டின் கதாபாத்திரம் அவரும் தனிக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார் .
அமிதாப் பச்சன் ,ரன்பீருக்கு பிரம்மாஸ்திரங்கள் பற்றி விளக்கி கூறும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். ஷாருக்கான் படத்தில் இடம்பெறும் காட்சிகள் குறைவே என்றாலும் அவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன ,நாகர்ஜூனாவின் நடிப்பும் குறிப்பிட்டுசொல்லக்கூடிய வகையில் உள்ளது .
இசையமைப்பாளர் ப்ரீத்தமின் பின்னணி இசையும், VFXம் படத்தின் கதையோட்டத்திற்க்கு துணையாக பயணித்துள்ளது .ரன்பீர் கபூருடன் இணைந்து பல கோடிகளுக்கும் அதிகமான பட்ஜெட்டில், ஃபேன்டஸி, ஆக்ஷன் கலந்த பொழுபோக்குசித்திரமாக இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கிஇருக்கிறார், காதலுடன் ஆக்ஷனும் கலந்த இது போன்ற கதைகள் பெரும்பாலும் இளம் ஆடியன்ஸை மையமாக வைத்து, அவர்களை கவரும் வகையிலேயே உருவாக்கப்டும்.அவர்களை இந்த ‘பிரம்மாஸ்திரா’ நிச்சயம் ஏமாற்றாது